Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 18- மலேசியர்கள் உள்ளூர் உற்பத்திகளான பழங்கள், காய்கறிகளை வாங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அதே வேளையில் அவர்கள் வளர்ச்சிக்கும் கை கொடுத்து ஊக்குவிப்பீர் என்று கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட விவசாய இலாகா அதிகாரிகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இங்குள்ள விவசாயத் திட்டத்தில் பயிரீடு செய்யப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் தரம், அதன் நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மேற்கண்ட தகவலை அவர் அலை ஒளியிடம் வெளியிட்டார்.
உள்ளூர் சந்தைகளுக்குக் கொண்டு வரப்படும் இங்கே பயிரிட்டு கொணரும் உற்பத்திப் பொருட்களை வாங்கி ஆதரிக்க வேண்டும் என்று கோலலங்காட் மாவட்ட ரீதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்களை உமா நந்தினி கேட்டுக் கொண்டார்.

இதன்வழி, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உள்ளூர் பயனீட்டாளர்கள் கை கொடுத்து உதவிட வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன் வைத்தார்.-Alaiolinews

சிலாங்கூர்
மலேசியர்கள் உள்ளூர் உற்பத்திகளை வாங்கி விவசாயிகள் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பீர்- உமா நந்தினி வேண்டுகோள்.
சிலாங்கூர்
இவ்வாண்டில் தேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு முகமை (ஏகெபிஎஸ்) க்கு ஆயுதங்கள் வழங்கப்படும்,உள்துறை அமைச்சர் அறிவிப்பு
சிலாங்கூர்
AKPS bakal dilengkapi penggunaan senjata api pada tahun ini - Menteri Dalam Negeri
பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!