Alaioli
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு

டிகே.மூர்த்தி

தெலுக் இந்தான், ஏப்ரல் 17- இன்று 17.04.2026 காலை 6.38 மணியளவில் தெலுக் இந்தான் நகர் பெக்கான் பாரு குடியிருப்புப் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 69 வயதுடைய ஆடவர் உயிரிழந்து விட்டதாகவும் தெலுக் இந்தான் போலீஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றதும் குறிப்பிட்ட சம்பவம் நடந்த இடத்திற்குப் போலீஸ் குழு விரைந்தனர்.


அங்கு போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் மாவட்டப் போலீஸ் தலைவர் CHUA KOK LIAN உறுதிப்படுத்தினார். 


முகமுடி அணிந்துக் கொண்டிருந்த மூன்று ஆடவர்கள் (20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர்)  பாதிக்கப்பட்டவரின் வீட்டின் முன்சுவரைத் தாண்டி ஏறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் நம்பப்படுகிறது.


காலை 6.02 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் மனைவி இறைவனுக்கு பிரார்த்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்த அந்த மூன்று சந்தேக முகமுடி நபர்கள் நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். 


அப்போது சந்தேக நபர்கள் வைத்திருந்த அரிவாள் என நம்பப்படும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்படதால், பாதிக்கப்பட்டவரின் வலதுகை மற்றும் இடது உள்ளங்கையில் பலத்த காயங்களுக்கு ஆளானவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.


இச்சம்பவம் நடந்ததும் சந்தேக நபர்கள் அனைவரும் பாதிப்பட்டவரின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் நம்பப்படுகிறது.


இக்கொள்ளைச் சம்பவத்தில் ஏற்பட்ட உண்மையான பொருளிழப்பு எவ்வளவு என்று போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இச்சம்பவம் குறித்த ஏதேனும் தகவல் அறிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது தெலுக் இந்தான் மாவட்ட (IPD) காவல் நிலையத்தின் 05-6222222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு போலீசாருக்கு உதவ முன்வருமாறு OCPD CHUA KOK LIAN கேட்டுக் கொண்டுள்ளார்.


தவிர, பொதுமக்கள் தங்கள் வீட்டுச் சூழலில் எப்போதும் மிகுந்த பாதுக்காப்புடன் இருப்பதை உறுதி செய்தல் உட்பட, முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று (PDRM) மக்களுக்கு அறிவுறுத்துகிறது என்றும் அவர் சுட்டினார்.- Alaiolinews

Leave a Comment
Trending News