Alaioli
ஜெராம், ஜாலான் பத்து பாத்தாவில் ஈக்கள் படையெடுப்பு- கிராம மக்கள் அவதி!

எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர் ஏப்ரல் 15 -  இங்கு ஜெராம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஜாலான் பத்து பாத்தாவில் கடந்த 12 ஆண்டுகளாக கிராமப் பகுதியில் படையெடுத்து வரும் ஈக்களால் கிராம மக்கள் பல்வேறு தொல்லைகளை அனுதினமும் எதிர்நோக்கி வருவதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் அருள் செல்வி நாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இன்று காலையில், நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள களத்தில் இறங்கியதாக அவர் கூறினார்.


மேலும்,  இந்த நடவடிக்கையின் போது, கோல சிலாங்கூர் மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் உதவியுடன் துணை அதிகாரி புவான் ஃபாத்தேஹா மாரோஜி  ஜெராம் வட்டாரத்தில் ஈக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் பணியாளர்களை அழைத்து சென்று மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை   கண்காணித்ததாக அருள் செல்வி அலை ஒளியிடம் குறிப்பிட்டார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News