Alaioli
இறைச்சி வெட்டும் கத்தியால் போலீஸ் அதிகாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவருக்கு ரிம.9,100 அபராதம்

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 15 -  கடந்த வாரத்தில் இங்கு தெலுக் பங்லீமா காராங்கில் ஒரு உணவகத்தில் ஏற்கனவே சாப்பிட்ட கடனை நிலுவையில் வைத்திருந்த பாக்கியை கடைச் சிப்பந்தி கேட்ட போது, கடனுக்கு உணவகத்தில் சாப்பிட்டு வந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஆவேசத்துடன் கையில் ஏந்திய இறைச்சி வெட்டும் கத்தியால்  அந்நபரை தாக்கும் முயற்சியில் மிரட்டியதைத் தொடர்ந்து உணவகத்தில் அமளி துமளி ஏற்பட்டது.


அப்போது உணவகத்தில் இருந்த சிலர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவல் கிடைத்து அங்கு விரைந்த போலீஸ்காரர் ஒருவரை, கடனுக்குச் சாப்பிட்டவர் கத்தியைக் கொண்டு ஓட ஓட விரட்டினார்.


எனினும், சம்பவத்தின் போது மற்ற காவல் துறையினர் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு அழுத்திப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


நான்கு தினங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞர் நேற்று காலையில் இங்கு தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்நபருக்கு  9,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக  காவல் துறையினர் தெரிவித்தனர்.


அதே வேளையில், அந்நபர் ஏற்கனவே செய்திருந்த 3 குற்றங்கள் பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட விருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.- Alaiolinews

Leave a Comment
Trending News