Alaioli
பினாங்கு பிப்ரவரி 2 பினாங்கு மாநிலத்தில் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் பொருட்டு,இங்கு தண்ணீர்மலை சாலையிலுள்ள மலைக்கோயிலுக்கு தன் பெற்றோருடன் வந்திருந்த, ஜாவி பகுதியைச் சேர்ந்த தராஸ்ரீ என்ற 11 வயது இந்தியச் சிறுமி, இங்கு எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, இங்கிருக்கும் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
இச்சிறுமியின் நிலையறிந்து,அவளை நேரில் காணும் பொருட்டு,மருத்துவமனைக்கு விரைந்த,இங்குள்ள ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.நேதாஜி ராயர், புக்கிட் குளுகோர்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், செனட்டர் டாக்டர் ஏ.லிங்கேஸ்வரன், மாநில மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன், மாநகர் மன்ற உறுப்பினர்களான டத்தோ ஹஜி அப்துல் ரசாக் ரஹ்மான் மற்றும் த.விஸ்வநாதன் ஆகியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இச்சிறுமிக்கு காயம் விளைவிக்கக் காரணமான விபத்து தொடர்பிலும், அவளை மோதித் தள்ளியதாக் கூறப்படும் வாகனம் யாதென்பதை கண்டறிவதிலும், போதியத் தகவல்களை திரட்டும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்த சிறுமிக்கு தகுந்த முறையில் சிகிச்சையளிப்பதற்கும் ஆவன செய்யப்பட்டிருப்பதாக, மாநகர் மன்ற உறுப்பினர் த.விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர்
இவ்வாண்டில் தேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு முகமை (ஏகெபிஎஸ்) க்கு ஆயுதங்கள் வழங்கப்படும்,உள்துறை அமைச்சர் அறிவிப்பு
சிலாங்கூர்
AKPS bakal dilengkapi penggunaan senjata api pada tahun ini - Menteri Dalam Negeri
பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!
சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்