Alaioli
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம் ஏப்ரல் 23.   மக்கள் நலத் திட்டங்கள், ஜோப் கேர் சிலாங்கூர் இளையோருக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள், ஏழ்மையைத் துடைத்தொழித்து வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகமலர்ச்சியுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் என பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து சிலாங்கூர் மாநிலம் அளப்பரிய அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போட்டு வருவதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் சிலாங்கூர் எம்எம் வானொலி 100.9 நேரலையில் நேரடி ஒலிப்பரப்பில் தே தாரேக் கோப்பி ஓ பரிமாறலுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் புகழாரம் சூட்டினார்.   


மாநில அரசின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான 15 ஆவது சட்ட மன்றக் கூட்டத் தொடரில் தாம் மாநில வளர்ச்சிக்கு முன் வைத்த சில வளர்ச்சி த் திட்டங்கள் குறித்து பேசிய விவரங்களை,  நேரலையில் வானொலி அறிவிப்பாளர் டிஜே அப்பிஷூடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தாம் மேற்கொண்ட கருத்தை முன் வைத்துப் பகிர்ந்து கொண்டதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் விவரித்தார்.


மாநில அரசு இட்ட பணியை சட்டென முடிப்பதில் மாநில அளவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்று வழங்கி வரும் பொறுப்பான நடவடிக்கைகளை கருத்தில் வைத்து பணியில் கவனம் வைத்து மக்கள் நலப் பணிகளுக்கான தேவைகளை நிறைவு செய்வதில் தளராத சேவையின் விளைவால்  மாநிலம் மகத்தான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். இந்த இனிய வேளையில்,  தமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி தமது கருத்தை வெளியிட முன் வந்த சிலாங்கூர் எம்எம் வானொலிக்கும்  நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக  பாப்பா ராய்டு தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News