Alaioli
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!-  பாப்பா ராய்டு அறிவிப்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம், ஏப்ரல் 23- மாநில அளவில் வேலை தேடி வரும் இளைஞர்களும் நடுவயதில் இருப்போரும் தாமதம் செய்யாமல் சிலாங்கூர் மாநில அரசின் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு உரிய வேலைகளில் அமரும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அறுவுறுத்தியுள்ளார்.


வரும் 25.4.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் இளையோர் பங்கேற்க வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். 


பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, த குர்வ் முத்தியாரா மண்டபத்தில் குறித்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். 


நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், மை கார்டு, வேலை தொடர்புடைய பத்திரங்களை உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.- Alaiolinews

Leave a Comment
Trending News