Alaioli
நீண்ட தொடர்கதையாக தொடரும் ஷா ஆலம் வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு கிள்ளான் ஆற்றின் படுகை அமைப்பே காரணம்

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் ஏப்ரல் 23- நீண்ட தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஷா ஆலம் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு கிள்ளான் ஆற்றுப் படுகையின் அமைப்பே முக்கிய காரணம் என்று போர்ட் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் துவான் அஸ்மிஷாம் ஷாமான் ஹூரி, மாநில சட்ட மன்றத்தின் 15 ஆவது கூட்டத் தொடரில் மேற்கண்ட தகவலை முன் வைத்துப் பேசினார்.


நீண்ட காலப் பிரச்சினையாக நீடித்து வரும் ஷா ஆலம் ஸ்ரீ மூடா மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் மோசமான வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனில், வடிகால் நீர் பாசன இலாகா அதிகாரிகள் உட்பட ஷா ஆலம் பண்டாராயா சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும் களத்தில் இறங்கி முறையான ஆய்வை மேற்கொண்டு அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை கூட்டத்தொடரில் முன் வைத்தார்.


இதற்கிடையே,  மாநில சட்ட மன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ்ஷா , ஷா ஆலம் வட்டாரத்தில் மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு இதற்கு  பொறுப்பேற்ற அரசு அதிகாரிகள் தாமதமின்றி உரிய தீர்வும் நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும்  வேண்டுகோளை சுல்தான் முன் வைத்திருந்த கருத்தையொட்டி சட்ட மன்ற உறுப்பினர் அஸ்மிஷாம் இவ்வாறு தமது விளக்கத்தை கூட்டத் தொடரில் குறிப்பிட்டார்.

Leave a Comment
Trending News