Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் ஏப்ரல் 21- பக்தர்கள் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் மலர், பழங்கள், பொங்கல் போன்ற காணிக்கைகளை இறைவன் சன்னதியில் வைத்து படைத்து வழிபடும் வழிபாட்டுத் தலங்கள்,
அது ஒரு போதும் விற்பனை மையங்கள் அல்ல, அது இறைவன் வீற்றிருக்கும் பக்தர்கள் சென்று குறைகளைச் சொல்லி மனச்சாந்தி பெறும் அமைதியான சூழல் நிறைந்த பக்தித் தலம் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துஷ்ட மனிதரையும் மனம் திருந்த வைத்து நல்ல மனிதராக மாற்றி அமைக்க வல்ல இறைவன் அமர்ந்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் , வியாபார நோக்கில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட யாவரும் செயல்படும் எண்ணத்தை உடனடியாக மறந்து விட்டு, விளையாட்டுக்காகக்கூட அதைப் பற்றி பேசாமல், அப்படிப்பட்ட கொள்கையை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் அலை ஒளி செய்தியாளர் வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.
மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினராக மாநில அரசின் வாயிலாக பதவி ஏற்ற காலம் தொட்டு, மாநில அளவில் செயல்படும் வழிப்பாட்டுத் தலங்கள், தமிழ்ப் பள்ளிகள், மக்கள் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்புகள், மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் திட்டங்கள் என ஏழை மாணவர்கள் வளர்ச்சி , மக்கள் நலன் கருதி தமது பணி செவ்வன தொடரும் என்று பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.
எனவே, வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் விற்பனைத் தலங்களாக மாற்றி பக்தர்கள் வெறுப்புக்கும் வேண்டாத தேவையற்ற பிரச்சினைகளுக்கும் காரணமாக ஆலயப் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டாம் என்று பாப்பா ராய்டு எச்சரித்துள்ளார் - Alaiolinews
கோலாலம்பூர்
கோலாலம்பூர் டேவான் பண்டாராயா மண்டப வாடகை முன்கட்டணத் தொகை வரும் மே முதல் நாளில் இருந்து குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வரும்! ஹன்னா இயோ தகவல்
புத்ராஜெயா
Kes seleweng dana RM230 juta: SPRM sita aset RM18.36 juta
கோலாலம்பூர்
Lima negeri dilanda hujan lebat hingga 7 malam ini - MetMalaysia
Pembunuhan
2 suspek kes tembakan diberkas polis, pistol dirampas
புத்ராஜெயா
Tiada bukti teknikal wujud pendedahan radiasi sebabkan kanser dalam kalangan kakitangan di PPUM - KKM
மலேசியா
MCA Youth Formalizes Support for “Tangkap Azam Baki” Rally; Demands Urgent Institutional Reform
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி