Alaioli
டிகே.மூர்த்தி
தெலுக் இந்தான், ஏப்ரல் 22- நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை கடந்த 129 ஆண்டுகளாக பக்தி நெறியாண்மையுடனும் தங்கள் சொந்த செலவில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை நாடே அறிந்த நிலையில் பணிவுடன் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழா சிறப்பான ஏற்பாடுகளுடன் கூடிய நிலையில் கொண்டாடப்படவுள்ளது. (01.05.2026) வெள்ளிக்கிழமை விடியற்காலை 4.00 மணிக்கு ஆலயம் திறக்கப்படுகிறது. அந்நிலையில் நேர்த்திக்கடன் செலுத்த பால் குடம் சுமந்து கோயிலை அடையும் பக்தர்களுக்கு கோயில் நிருவாகம் எல்லா வசதிகள் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழா ஈப்போ தைப்பூசம் போன்று எல்லா நிலையிலும் நேர்மறையாகவும், பக்தி நெறியுடனும் நடைபெற வேண்டும் என்பதில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கத்துடன் கீழ்ப்பேரா மாவட்ட காவல் துறை கைங்கர்யம் முன்னிட்டு கையேடு கைகோர்க்க முன்வந்துள்ளது.
சித்திரா பௌர்ணமி திருவிழா நமது சமயம். நமது பண்பாட்டு சார்ந்ததாகும். அதனை உதாசீனம் படுத்தும் வகையில், கோயிலுக்கு அப்பாற்பட்ட நிலையில், நடத்தப்படும் சிலரின் எதிர்மறையான செயலுக்கு எதிராக போலீசார் காணப்போகும் களம் குறித்த ஒரு புதிய விடியலுக்கான மாற்றத்தை தெலுக் இந்தானிலும் ஈடேறப்போகிறது என்றும் மாவட்ட காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் பேசினார்.

இவ்வாண்டு திருவிழாவில் பொதுமக்களின் நலனுக்கு மிக மிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதற்கு பொது மக்களின் அர்பணிப்புதான் காவல் துறைக்கு கட்டாயமாகவும் உள்ளது. அப்போதுதான் போலீசார் தங்கள் கடமையை நிறைவேற்ற இலகுவாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. அந்நிலையில் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்பது காவடி ஆட்டம் என்ற பெயரில், அறுந்தவால் ஆட்டம் போடுவதும், குண்டர் குறித்த பாடல்களை ஒலிக்கச் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும், பக்திப்பாடல் என்பது கோயில் மாண்பின் ஒரு பகுதி என்றார்.
முடியாது இது திருவிழா குடிப்பதற்கும் ஆட்டம் போடுவதற்கும் எங்களுக்கு சுதந்திரம் உண்டு. எவரும் தடைப்போட முடியாது என்ற பிடிவாதம் செய்தால் போலீசார் அவர்களை லாரியில் ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர். இது மற்றவர்களின் பார்வைக்கு எப்படி இருக்கும் என்பதை சற்றேனும் சிந்திக்க வேண்டும். சிந்தித்து மாற வேண்டும். இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், கவல் துறை உங்களை மாற்ற வைக்கும் என்பதில் பின்வாங்காது. கூறுவதைக் காதுக் கொடுத்து கேளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவல் குறித்த பொது மக்கள் மத்தியில் கண்டிப்பாக வைராலாக்கச் செய்யுங்கள். மேலும், தற்காலிகக் கூடாரங்களை ஊராட்சி மூலம் எடுத்துள்ள குத்தகையாளர்கள் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாப்பது கட்டாயம் என்பதை காவல் துறையின் சார்பில் இந்த நினைவுறுத்தல் வழங்குகிறேன்.
முக்கியமாக கூடாரங்கள் உள்ள சாலையில், பக்தர்கள் போக்குவரத்துக்கு தடையாக இருக்கக்கூடாது. இருந்தால் இது குறித்த MPTI தலைமையிடம், தெலுக் இந்தான் இந்து சங்கப் பேரவையின் செயலாளர் எல். அக்னேஷ் கொண்டுச் செல்வார் என்றும் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் சுட்டினார். மீண்டும் கூறுகிறேன் இது நமது சமய திருவிழா. ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.- Alaiolinews


ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus