Alaioli
அகல்யா
சுங்கை பட்டாணி,ஏப்.21 - மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர் இயக்கங்கள் ஒரு ரிங்கிட் சேகரிப்புத் திட்டத்தை முன்னெடுத்தால், குறுகிய காலத்தில் சொந்தக் கட்டடம் வாங்குவது சாத்தியமாகும் என கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் டாக்டர் க. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சுங்கை பட்டாணி, எஸ்.பி. கிளப்பில் நடைபெற்ற கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் 54-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் தலைமை உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சொந்தக் கட்டடத்தின் அவசியம் மலேசியாவில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தைப் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கடப்பாட்டில் உள்ள பல எழுத்தாளர் இயக்கங்களுக்கு இன்று வரை நிரந்தரக் கட்டடங்கள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சமுதாயத் தலைவர்களும் பத்திரிகைகளும் முன்னின்று ஒத்துழைப்பு வழங்கினால், பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு ரிங்கிட் வழங்குவதன் மூலம் ஒரே மாதத்தில் இயக்கத்திற்குச் சொந்தக் கட்டடத்தை வாங்கிவிட முடியும். இதன் மூலம் இந்திய இயக்கங்களின் சொத்துகளும் பெருகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக ஐந்து எழுத்தாளர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தவுஃபிக்கின் சுங்கை பட்டாணி சேவை மைய இந்தியர் உதவிப் பிரிவின் அதிகாரி உயர்திரு தமிழரசு சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இலக்கியத் துறையில் பங்காற்றிய கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து முக்கிய ஆளுமைகளுக்கு இதன்போது சிறப்பு செய்யப்பட்டது
முனைவர் மாரி சச்சிதானந்தம் கோ. புண்ணியவான், தமிழ்மணி, மா. அம்பிகாபதி, இல. பெருமாள், கே. பாலமுருகன் சிறப்பு செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை விதியில் மாற்றம் செய்யப்பட்டு மின்னியல் ஊடகங்களுக்கும் அங்கீகாரம் என்ற வகையில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, எழுத்தாளர் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை விதிகளில் முக்கியத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தற்போதுள்ள விதிகளின்படி, அச்சு ஊடகங்களில் வெளியான படைப்புகளைச் சமர்ப்பித்தாலே உறுப்பினர் தகுதி வழங்கப்படுகிறது. ஆனால், அச்சு ஊடகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், இளம் எழுத்தாளர்கள் பலரும் மின்னியல் ஊடகங்களில் தடம் பதித்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அச்சு ஊடகங்களோடு மின்னியல் ஊடகங்களில் எழுதும் எழுத்தாளர்களும் இயக்கத்தில் சேரத் தகுதி உடையவர்கள் எனச் சட்டத் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர் உதயகுமார் முன் வைத்தார். இத்திருத்தத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக, கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் காலத்திற்கேற்ற புதிய லோகோ (சின்னம்) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.-Alaiolinews



ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus