Alaioli
பந்திங் சித்தி விநாயகர் ஆலய நாயன்மார் பெருவிழாவில் 200 பேர் பங்கேற்பு

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 20 - பந்திங் வட்டாரத்தில் நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நாயன்மார் பெருவிழாவில் மக்கள் குடியிருப்பு ப்பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தலைநகரில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த சைவத் திருக்கோயில் கலை, கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நாயன்மார்கள்  சிறப்புகள் பற்றி தமது பக்தி உரையில் குறிப்பிட்டார்.


வழிபாட்டுத் தலங்களுக்கு இறைவனை தரிசிக்க வருவோர் எத்தகைய நிலையில் உடையில் கவனம் செலுத்தி இறைவனை வேண்டி அருள் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.


செந்தோசா சைவ சமய மன்றம், சிலாங்கூர் சைவ சமய மன்றம், நீலாய் சைவ சமய மன்றம் மற்றும்  ஸ்ரீ மஞ்சா சைவ சமய மன்றம் ஆகிய சமய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  பக்த மெய்யன்பர்கள் அனைவரும் மண்டபத்தில் மதிய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டனர்.- Alaiolinews


Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News