Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - மாநில அரசு செயலகத்தின் வாயிலாக 13 குர்ட் வாரா வழிபாட்டுத் தலங்களுக்கு 95, 200 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டு சீக்கிய ஆலயத் தலைவர்களிடம் அந்த நிதி ஒப்படைக்கப் பட்டதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், சிறப்பு உதவி நிதியாக பெட்டாலிங் டின் சீக்கிய ஆலயச் சங்கத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் காசோலையாக அதன் பொறுப்பாளர்களிடம் எடுத்து வழங்கப் பட்டதாக அவர் கூறினார்.

மேலும், சீக்கிய வம்சாவளியினரைச் சேர்ந்த எஸ்பிஎம் 2025 தேர்வில் சிறந்த அடைவு நிலையை எட்டிப் பிடித்த 20 மாணவர்கள் அதற்கான ஊக்குவிப்புத் தொகையை தம்மிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.

நேற்று இரவு இங்கு, பெட்டாலிங் ஜெயா லாமான் எம்பிபிஜே மண்டபத்தில் நடைபெற்ற சீக்கியர்களின் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பாப்பா ராய்டு மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டில் கிள்ளான் குர்ட்வாரா சாஹிப்பில் இதே போன்றதொரு சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் நடைபெற்றதை பாப்பா ராய்டு தமது வாழ்த்துரையில் நினைவு படுத்தினார்.

முன்னதாக, பங்ரா இசைக் கலைஞர்கள் வரவேற்புடன் அவர் நிகழ்ச்சி மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

சுவையான இரவு உபசரிப்புடன் சீக்கியரின் பண்பாடுகளை எடுத்துக் கூறும் ஆடல், பாடல் அனைத்தும் விருந்தினருக்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்தது எனலாம்.
சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழாவில் பெட்டாலிங் ஜெயா பண்டாராயா டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி முகமட் ஷாரி ஹாஜி சமிங்கோன், துவான் மோகான் சிங் மற்றும் 24 குர்ட் வாரா சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள், பாப்பா ராய்டுவின் துணைவியார் திருமதி மகேஸ்வரி, அவரது சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி,என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழாவில் கலந்து கொண்டனர்.- Alaiolinews







ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus