Alaioli
பினாங்கு பிறை ஜாலான் பாரு ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,இன்று காலை 17 பிப்ரவரி 2026 காலை பக்தி உணர்வுடன் விக்னேஸ்வரர் பூஜை மற்றும் கணபதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு ஆலயத்தின் ஆன்மீக நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்ததுடன், கும்பாபிஷேக திருவிழா அனைத்து தடைகள் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் விநாயகப் பெருமானுக்கு முதலில் பூஜைகள் அர்ப்பணிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் ஆகம முறையில் கணபதி ஹோமத்தை நடத்தினர். யாகசாலையில் அக்னி ஏற்றப்பட்டு, சிறப்பு ஹோம திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களின் நல்வாழ்வு, அமைதி மற்றும் ஆலய வளர்ச்சி வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
காலை முதலே பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, பூஜை நிகழ்வுகளில் பக்தி உணர்வுடன் ஈடுபட்டனர். ஹோமத்தின் இறுதியில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஶ்ரீ முனிஸ்வரர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் இவ்வாறான ஆன்மீக நிகழ்வுகள் ஆலயத்தின் பாரம்பரியம் மற்றும் சமய ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் வரவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆலய தலைவர் மேஜர் சேகரன் முனியாண்டி,அரங்காவலர் டத்தோ ஶ்ரீ ந.கோபாலகிருஷ்ணன்,டத்தோ சந்திரகுமார் மற்றும் பக்த பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர் .
ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus